கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் கிராமத்தில் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ அழகர் சித்தர் வகையறா திருக்கோவிலில் கடந்த வாரம் 20.2.2025 வியாழன் கிழமை இறைவனை தரிசிக்க சென்ற பக்தர் ஒருவர் கூறியதாவது அங்கு காட்சியளிக்கும் சிவபெருமான் சன்னதியில் ஒரு மாற்றுத்திறனாளி வாய் பேச முடியாத பெண் ஒருவர் பக்தர்களுக்கு விபூதி குங்குமம் கொடுத்து கொண்டு இருப்பதை கண்டு வியப்படைந்தார் பிறகு இந்த சம்பவத்தை ஆராய்ந்து விசாரித்துப் பார்த்ததில் அன்று அங்கு பூசாரியாக பணி புரிய வேண்டிய ராஜன் என்பவர் தன் சொந்த வேலை காரணமாக தன் இல்லத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை பூசாரியாக அவர் நியமித்துக் சென்று இருக்கிறார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோர்! திருக்கோவிலில் பணிபுரியும் ராஜன் தற்காலிக பூசாரி தான். ஆனால் அவர் தன் வீட்டில் பணிபுரியும் பெண்ணை அவருக்கு பதிலாக பூசாரியாக நியமித்து சென்றிருக்கிறார். இவை அனைத்தும் திருக்கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில்(cctv)பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கோவில் என்பதால் இந்த அலட்சியமா அல்லது இவை அனைத்தும் அதிகாரிக்கு தெரிந்தே நடக்கிறதா… இல்லை உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ அழகர் சித்தர் கோவிலின் மாண்பை குறைக்க முயற்சியா? என்றே புரியவில்லை. இச் சம்பலம் குறுத்து இந்து சமய அறநிலைத்துறை
சம்மந்தப்பட்டவர் மீது இந்து சமய அறநிலைத்துறை கடலூர் இணை ஆணையர் பரணிதரன் நடவடிக்கை எடுப்பாரா ? ….


More Stories
பேருந்துக்குள் நவீன அறுவை சிகிச்சை பயிற்சி!மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தில் முதன்முறையாக ஏற்பாடு
காவிரி–குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கக் கோரி மதுரையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!!
அதிகாரிகளுடன் அமைச்சரின் தந்தை ஆய்வு? காரைக்குடி அருகே STP பணியில் சர்ச்சை… பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு!