சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள தெற்கு மாரந்தை கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.மாரந்தை கலுங்கிலிருந்து சூரணம் எல்கை வரை, மேலும் சேத்தூர் சீவலங்கண்மையிலிருந்து சூரணம் எல்கை வரை நீர்வழிப் பாதைகள் சென்று, சூரணத்தில் ஒன்றிணைந்து ஆர்.எஸ். மங்கலம் கம்மாய் வரை செல்கின்றன.

இந்நிலையில் இப் பகுதியைச் சேர்ந்த சிலர் நீர்வழிப் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து பண்ணைக் குட்டை அமைத்துள்ளனர். இதனால் நீர்வழிப் பாதை குறுகி காணப்படுவதோடு, முன்பு ஆடு–மாடு மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது மேய்ச்சலுக்கு தகுதியில்லாமல் போய்விட்டதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்சினையை முன்னிட்டு, நில நிர்வாக ஆணையர் மாரந்தை கலுங்கிலிருந்து சொக்கப்படப்பு எல்லை வரை உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உத்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
பேருந்துக்குள் நவீன அறுவை சிகிச்சை பயிற்சி!மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தில் முதன்முறையாக ஏற்பாடு
காவிரி–குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கக் கோரி மதுரையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!!
அதிகாரிகளுடன் அமைச்சரின் தந்தை ஆய்வு? காரைக்குடி அருகே STP பணியில் சர்ச்சை… பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு!