July 10, 2026

முன்னாள் இராணுவ வீரரின் உடல் மருத்துவக் கல்விக்காக தானம் – சிவகங்கை மருத்துவக் கல்லூரி பாராட்டு

சிவகங்கை மாவட்டம் கொட்டகுடி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் திரு. பஞ்சவர்ணம் (78) அவர்கள் மறைவுக்குப் பின்னர், அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவரது மனைவி மற்றும் வாரிசுகள் இன்று அவரது உடலை அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கினர்.மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களின் உடற்கூறியல் கல்வி மற்றும் மருத்துவப் பயிற்சிக்கு பயன்படும் வகையில் இந்த உடல் தானம் செய்யப்பட்டது.இந்த மனிதநேயச் செயலைப் பாராட்டி, அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வர், பஞ்சவர்ணம் அவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி துணை முதல்வர், நிலைய மருத்துவ அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி பணியாளர்கள் கலந்து கொண்டு முன்னாள் இராணுவ வீரரின் உயரிய சேவைக்கும், குடும்பத்தினரின் மனிதநேய முடிவிற்கும் மரியாதை செலுத்தினர்.

Spread the love