
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் இயங்கி வரும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் (PRO) அலுவலராகப் பணிபுரிந்து வரும் ராஜ பிரகாஷ்,மாவட்ட ஆட்சியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் போது அங்கிருக்கும் அலுவலர்கள், BDO, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பஞ்சாயத்துத் தலைவர்களிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வதாகவும், செய்தியாளர்களுக்கு வழங்க வேண்டும் எனக் கூறி ₹10,000 முதல் ₹20,000 வரை வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், திங்கள் முதல் வியாழக்கிழமை வரை ஒப்பந்ததாரர்களிடம் சந்தாவாக ₹1,200 முதல் ₹1,500 வரை வாரம் தவறாமல் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.கண்காட்சி & விழா நிதி: ஆம்பூரில் 38 நாட்கள் நடைபெற உள்ள கண்காட்சி உரிமையாளரிடம் ₹30,000 லஞ்சம் கேட்டதாகவும், ஏலகிரி மலையில் நடைபெற்ற கோடை விழாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ₹40,000 முறைகேடு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.பண்டிகை கால வசூல்: கடந்த வருடம் தீபாவளி காலத்தில் RTO, HR&CE மற்றும் நில அளவைத் துறை அதிகாரிகளிடம் பத்திரிகையாளர்களுக்குக் கொடுக்க வேண்டும் எனக் கூறி ₹50,000 முதல் ₹1,00,000 வரை பெற்றுத் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.அரசுச் சொத்து பராமரிப்பு மற்றும் சலுகைகள் மறுப்பு:தமிழ்நாடு அரசால் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு (PRO Office) வழங்கப்படும் கணினிகள் மற்றும் உபகரணங்களைச் செய்தியாளர்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்த முடியாதபடி தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “என் இஷ்டப்படிதான் செயல்படுவேன், எனக்கு யாரும் அறிவுறுத்தத் தேவையில்லை” என்று அலட்சியமாகப் பதிலளிப்பதாகக் கூறப்படுகிறது.அதிகார தோரணை மற்றும் ஒருமை பேச்சு:செய்தியாளர்கள் மற்றும் அலுவலகப் பார்வையாளர்களை மதிக்காமல், கால் மேல் கால் போட்டுக்கொண்டு கையைக் கட்டியபடி “உங்களால் முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது” எனத் திமிராகப் பேசுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், அவருடன் பணிபுரியும் சக அரசு அதிகாரிகள், கீழ்நிலை ஊழியர்களை “யோவ், வாயா, போயா, போடா, வாடா” என அனாவசியமான வார்த்தைகளில் திட்டுவதும், ஒருமையில் பேசுவதும் இவரது வழக்கமாக உள்ளதாகத் தெரிகிறது.வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பாகுபாடு:தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் செய்தியாளர்களுக்காக ஒரே ஒரு அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் (WhatsApp) குழு மட்டுமே இயங்கி வருகிறது.ஆனால், திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் செய்தியாளர்களிடம் பிரிவினை ஏற்படுத்தும் நோக்கத்தோடு நான்கு தனித்தனி வாட்ஸ்அப் குழுக்களாகப் பிரித்து வைத்துள்ளார். மேலும், அரசு வழங்கும் இலவசப் பேருந்து பயண அட்டையைக் (Bus Pass) கூட தகுதியான அனைவருக்கும் வழங்காமல், ஒரு சில செய்தியாளர்களை மட்டும் திட்டமிட்டுத் தவிர்த்துப் பாகுபாடு காட்டி வருகிறார்.ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் செய்தியாளர்களைப் பிரித்தாளும் நோக்கில் செயல்பட்டு வரும் பி.ஆர்.ஓ ராஜ பிரகாஷ் மீது திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமும், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநரும் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்கள் வலுவான கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
அதிகார தோரணையா? அல்லது வசூல் வேட்டையா? – திருப்பத்தூர் பி.ஆர்.ஓ மீது அடுக்கடுக்கான புகார்கள்!
காந்தி ஜெயந்தி விழாவில் சிறைவாசிகளின் திறமைகள் ஒளிர்ந்தன: 600-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கல்
மதுரையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம்!முதல்வர் விஜய்