October 19, 2026

மதுரையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம்!முதல்வர் விஜய்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் இன்று (28-ந்தேதி) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.திட்ட தொடக்க விழாவுக்காக மதுரை வந்த முதல்வர் விஜய், விமான நிலையத்தில் இருந்து ராஜாஜி மருத்துவமனைக்கு சாலை வழியாக சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மீனாட்சி அம்மன் வேடமணிந்து நின்ற சிறுமியை கையில் தூக்கி, முதல்வர் விஜய் அன்புடன் வாழ்த்தினார்.முதல்வர் வருகையையொட்டி ராஜாஜி மருத்துவமனை வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. மாநகரின் முக்கிய சாலைகளும் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்பட்டன.குழந்தைகளுக்கு தங்க மோதிரம்திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், முதல்கட்டமாக மேடையில் இருந்த 3 தாய்மார்களின் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற தாய்மார்களுக்கு மோதிரங்களை வழங்கினார்.அப்போது சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கும் முதல்வரே நேரடியாக மோதிரம் அணிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அவர்களின் விருப்பத்தை ஏற்று, குழந்தைகளின் கைகளில் முதல்வர் விஜய் தங்க மோதிரங்களை அணிவித்தார்.குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய முதல்வர்மேலும், சில பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் பெயர் சூட்ட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று, குழந்தைகளை கையில் தூக்கி கொஞ்சி, பெயர்களை சூட்டி மகிழ்ந்தார்.ஒரு பெண், தனது குழந்தைக்கு முதல்வர் பெயர் சூட்டியதை கண்டு உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். அவரை முதல்வர் விஜய் கட்டித்தழுவி ஆறுதல் கூறினார்.பின்னர் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் பயனாளிகளான தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுடன் முதல்வர் விஜய் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை முதல்வரிடம் வழங்கி மகிழ்ந்தனர். தொடர்ந்து தாய்மார்களுடன் முதல்வர் விஜய் ‘செல்ஃபி’ புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.1.28 லட்சம் மோதிரங்கள் கொள்முதல்விழாவில் முன்னதாக அமைச்சர் அருண் ராஜ் பேசுகையில், “தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தங்கத்துக்கு அரசே உத்தரவாதம் அளிக்கிறது. முதல் கட்டமாக 1 லட்சத்து 28 ஆயிரத்து 499 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பிரசவமாகி வீடு திரும்பும்போதே தாய்மார்களுக்கு மோதிரங்கள் வழங்கப்படும்” என்றார்.மேலும், சித்திரைத் திருவிழாவில் தங்கைக்காக அண்ணன் சீர் சுமந்து வரும் மதுரையில், சகோதரப் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்திருப்பது பொருத்தமானது என்றும் அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார்.

𝔽𝕠𝕣 𝔸𝕕𝕧𝕖𝕣𝕥𝕚𝕤𝕖𝕞𝕖𝕟𝕥 𝕔𝕠𝕟𝕥𝕒𝕔𝕥: 9585323132 -9443571719


Spread the love