
மதுரை மத்திய சிறையில் மகாத்மா காந்தியின் 157-வது பிறந்த நாள் மற்றும் சிறைவாசிகள் நலநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.விழாவிற்கு சிறை கண்காணிப்பாளர் சதீஸ் குமார் தலைமை வகித்து, மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அலுவல் சாரா பார்வையாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, சிறைவாசிகளை ஊக்கப்படுத்தினர். தொடர்ந்து, சிறைவாசிகள் பாடல், நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.மேலும், விளையாட்டு, கவிதை, ஓவியம், பாட்டுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற சிறைவாசிகளுக்கு 600-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.காந்தியடிகளின் மனிதநேயம், ஒழுக்கம் மற்றும் சீர்திருத்தக் கொள்கைகளை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழா, சிறைவாசிகளிடையே உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.


More Stories
அதிகார தோரணையா? அல்லது வசூல் வேட்டையா? – திருப்பத்தூர் பி.ஆர்.ஓ மீது அடுக்கடுக்கான புகார்கள்!
அரசு நிகழ்ச்சிகளில் ‘வசூல் வேட்டை’யா? அதிகார தோரணையில் திருப்பத்தூர் PRO ராஜபிரகாஷ்!
மதுரையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம்!முதல்வர் விஜய்