அரசு நிகழ்ச்சிகளில் தொடரும் ‘வசூல் வேட்டை’?! – அதிகார தோரணையில் மிரட்டும் திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜ பிரகாஷ் மீது பாயும் புகார்கள்!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வரும் ராஜ பிரகாஷ் மீது, சக அலுவலர்கள் மற்றும் செய்தியாளர்கள் தரப்பிலிருந்து அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன.
இவர் மீதான குற்றச்சாட்டுகள் தற்போது ஊடக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசுத் துறைகள் செயல்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தில் நடப்பதோ வேறுவிதமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு PRO-வாகப் பணியாற்றும் ராஜ பிரகாஷ் மீது எழுந்துள்ள புகார்கள் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களிடம் பணம் பெறும் வரை தனது அதிகாரப்பூர்வ வாகனத்தை அங்கிருந்து நகர்த்த மாட்டாராம். அதையும் மீறி பணம் கொடுக்க தாமதித்தால், அவர்களின் தொலைபேசி எண்களுக்குத் தொடர்ச்சியாக அழைத்துத் தொல்லை கொடுப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து யாரிடமாவது கேள்வி கேட்டால், “நான் 20 கோடி ரூபாய்க்கு சொத்துக்கு அதிபதி; நான் இங்கு வந்து வேலை செய்ய வேண்டிய அவசியமே இல்லை” என்று கால் மேல் கால் போட்டுக்கொண்டு தெனாவட்டாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளாராம்.
உண்மையாகக் களத்தில் உழைக்கும் செய்தியாளர்களை மதிப்பதில்லையாம். அவர்களின் வருகைப் பதிவேட்டில் (Attendance) இவரே தன்னிச்சையாக ‘ஆப்சன்’ போடுவதுடன், அவர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும், ஒரு சிலரின் தனிப்பட்ட பேச்சைக் கேட்டுக்கொண்டு உண்மையான செய்தியாளர்களைப் புறக்கணிப்பதும், பேருந்து பயண அட்டை (Bus Pass) கேட்டால் பணம் கேட்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

தனிநபர் அடிமை சேவையா?
அலுவலகத்திற்கு வந்து செல்லும் போது இவருடைய பைகள், செல்போன் மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவற்றை அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற ஊழியர்களைக் கூப்பிட்டுத் தூக்கச் சொல்லி உத்தரவிடும் அளவுக்கு இவரது அதிகாரப் போக்கு எல்லை மீறிச் செல்வதாகப் பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
“இவ்வளவு தீவிரமான புகார்கள் மீதும், துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசுக்கும் துறைக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் இது போன்ற அதிகாரிகள் மீது சம்பந்தப்பட்ட துறை இயக்குநரகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
l

More Stories
காந்தி ஜெயந்தி விழாவில் சிறைவாசிகளின் திறமைகள் ஒளிர்ந்தன: 600-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கல்
அரசு நிகழ்ச்சிகளில் ‘வசூல் வேட்டை’யா? அதிகார தோரணையில் திருப்பத்தூர் PRO ராஜபிரகாஷ்!
மதுரையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம்!முதல்வர் விஜய்