October 19, 2026

தொழுப்பேட்டில் விஜய் பிரசாரம்!மதுராந்தகம் இடைத்தேர்தலில் 45 ஏக்கரில் பிரம்மாண்ட ஏற்பாடு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து, தமிழக முதல்வர் விஜய் நாளை (25-ந்தேதி) தொழுப்பேடு பகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக அப்பகுதியில் பிரம்மாண்ட பிரசார மேடை அமைக்கப்பட்டுள்ளது.மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக பல்வேறு அமைச்சர்கள் ஏற்கனவே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விஜய் நாளை மாலை தொழுப்பேட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்க உள்ளார்.இதற்காக சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் பிரசாரக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவு வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதியில் பொதுமக்கள் அமர்ந்து பிரசாரக் கூட்டத்தை பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.விஜய் நாளை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பிரசார மேடையில் பேச உள்ளதால், தொழுப்பேடு பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.வீரப்பன் தெரிவித்துள்ளார்.

Spread the love