October 19, 2026

ஜெம் வீரமணி வழக்கில் சிறுமிகளுக்கு நீதி வேண்டும் மு.க.ஸ்டாலின்:திமுக மீது பொய்யான அவதூறு பரப்புவது அருவெறுப்பான செயல் !

ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், வீரமணியுடன்தொடர்புடையவர்கள், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் என யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர்வலியுறுத்தியுள்ளார்.மேலும், “இந்த வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் திமுக ஆட்சியில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தல் அரசியலுக்கான கருவியாக பயன்படுத்துவதையும், திமுக மீது பொய்யான அவதூறுகளை பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவதே அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love