
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சிவகங்கை மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில் சிவகங்கை அன்னை முதியோர் இல்லத்தில் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில், முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியவர்களுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், அவர்களுடன் கலந்துரையாடி நலம் விசாரித்த வழக்கறிஞர்கள், முதியவர்களின் ஆசி மற்றும் வாழ்த்துகளைப் பெற்றனர்.

இந்த சமூகநல நிகழ்வில் வழக்கறிஞர்கள் ஆர். பிரபாகர், பில்லூர் கார்த்தி, ஆனந்தகுமார், துஷாந்த் பிரதீப் குமார், எம். ராஜ அமுதன், சதீஷ், எம். அழகு, காட்டு ராஜா, சகோ. செல்வராஜன், ஏ.எஸ். செந்தில், கோகுல் பாண்டியன், சுரேஷ் மற்றும் சக்கந்தி காஜா ஆகியோர் கலந்து கொண்டு முதியவர்களுக்கு உணவு மற்றும் இனிப்புகளை வழங்கினர்.

கலைஞரின் பிறந்த நாளை மனிதநேய சேவையுடன் கொண்டாடிய திமுக வழக்கறிஞர்களின் இந்த முயற்சி, முதியோர் இல்ல வாசிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.

More Stories
பேருந்துக்குள் நவீன அறுவை சிகிச்சை பயிற்சி!மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தில் முதன்முறையாக ஏற்பாடு
காவிரி–குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கக் கோரி மதுரையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!!
அதிகாரிகளுடன் அமைச்சரின் தந்தை ஆய்வு? காரைக்குடி அருகே STP பணியில் சர்ச்சை… பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு!