
புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக் கல்லூரியில்2022 ஆம் வருடம் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு பிபிஏ படிக்கும் மாணவியிடம் அதே கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர் முத்துக்குமரன் என்பவர் செல்போனில் மாணவியிடம் ஆபாசமாக பேசியது வெளியானது அதனைத் தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் கல்லூரிக்கு சென்று முத்துக்குமரிடம் தகராறு செய்தனர் மேலும் இது தொடர்பாக கல்லூரி முதல்வர் திருச்செல்வத்திடம் பெற்றோர் புகார் அளித்தனர் இதன் உண்மைத்தன்மையை கண்டறிவது தொடர்பாக விசாரணை நடந்தது ஆறு பேர் கொண்ட குழுவை கல்லூரி நிர்வாகம் அமைத்து அந்த விசாரணையில் குற்றச்சாட்டு பட்டு உள்ள நிறுவனமானது அதன் அடிப்படையை மையமாக வைத்து கௌரவ விரிவுரையாளர் முத்துக்குமரன் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த மற்றொரு கௌரவ விரிவுரையாளர் கலையரசன் ஆகியோர் பணியிட நீக்கம் செய்யப்பட்டார். அது குறித்து கடந்த 2022 ஆம் ஆண்டில் பல நாளிதழ்களில் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானதும் அனைவரும் அறிந்ததே மேலும் தற்பொழுது .

வருகின்ற 02.09.2025ம் தேதி புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு முத்துக்குமரன் கௌரவ விரிவுரையாளராக பணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வரவே புதுக்கோட்டை உள்ள அனைத்து மகளிர் அணி மகளிர் நலன் காப்போம் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.ஏற்கனவே முத்துக்குமரன் மீது பாலியல் ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு கல்லூரியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார் இவர் முற்றிலும் பெண்கள் பயிலும் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணியில் சேர்ப்பது எவ்வாறு சாத்தியம் இருக்கிறது என்றும் இது போன்ற சர்ச்சைகள் சிக்கியவர் பெண்கள் பயிலும் கல்லூரியில் பணியாற்றுவது பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்காது எனவும் பல சர்ச்சைகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன என்று கவலை தெரிவித்து வருகின்றனர் இவர் பெண்களிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியானதை ஊடகங்கள் ஒளிபரப்பப்பட்டு உண்மை நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருக்கின்றனர் இவர் மேலும் பல குற்ற சம்பவங்களில் பெண்களிடம் ஈடுபடலாம் என்ற அச்சத்தை மகளிர் அமைப்பினரும் சமூக ஆர்வலர்களும் புதுக்கோட்டையில் தெரிவித்து வருகின்றனர்.மகளிருக்கு முக்கியத்துவம் அளித்து நல்லாட்சி நடத்தி வரும் தமிழக முதல்வரின் ஆட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாகவே கல்லூரி நிர்வாகம் குற்ற வழக்கு தொடர்புடைய இவரை பணியில் சேர்வதை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஆண்கள் பயிலும் இடத்திற்கு இவரை பணியில் அமர்த்தி இவர் பணியாற்றப்பட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது என்று தெரிவித்து வருகின்றனர் ஆகவே இது சம்பந்தமாக தலைமை கல்வி கல்லூரி நிர்வாகம் மறுபரிசீலனை செய்து பெண்கள் பயிலும் கல்லூரியில் இவர் பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருவதை கருத்தில் கொண்டு இவரை ஆண்கள் பயிலும் கல்லூரிக்குஅனுப்ப வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இது குறித்து மாவட்ட நிர்வாகமும் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

More Stories
விசாரணைக் கைதி மரணம் வழக்கு: மானாமதுரை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் தீவிர ஆய்வு – உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை
பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு: கூடலூரில் உலக சாதனை – 100 மாணவர்கள் தொடர்ச்சியான தற்காப்புக் கலை காட்சி
“உருக்கமான ஆடியோ வெளியீடு”: சிவகங்கை பாஜக மகளிர் அணித் தலைவி தற்கொலை முயற்சி – அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி!!