சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இளையான்குடி கண்மாய் கரை பகுதியில் ஜங்ஷன் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் 35 ஆண்டிற்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வருகின்றனர் மேலும் இது அரசால் பதிவு எண் 44/2025 முறையாக பதிவு செய்யப்பட்ட சங்கம் இளையான்குடி கண்மாய் கரையில் இளையான்குடி காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆட்டோ ஓட்டுநர்களிடம் காரசாரமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது இங்கு யாரும் ஆட்டோவை நிறுத்தக்கூடாது அதையும் மீறி நிறுத்தினால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும்.

உங்களுக்கு ஆட்டோ நிறுத்த வேண்டும் என்றால் சொந்த இடத்தை வாங்கி அதில் நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் ஆட்டோ ஓட்டுநர்களை மட்டும் மரியாதை இன்றி தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரத்தியடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு கோரிக்கை மனுவை எழுதியுள்ளனர் அதில் நாங்கள் நீண்ட காலமாக இங்கு ஆட்டோ ஓட்டி வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்றோம் அரசு காவல் அதிகாரி இவ்வாறு பேசியதை தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக அதில் குறிப்பிட்டு இருந்தது இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது என்று காவல் ஆய்வாளருக்கு அழுத்தம் கொடுத்த யார் அந்த சார்? என்ற கேள்வியும் எழுகிறது….
𝔽𝕠𝕣 𝔸𝕕𝕧𝕖𝕣𝕥𝕚𝕤𝕖𝕞𝕖𝕟𝕥 𝕔𝕠𝕟𝕥𝕒𝕔𝕥: 9585323132 -9443571719


More Stories
விசாரணைக் கைதி மரணம் வழக்கு: மானாமதுரை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் தீவிர ஆய்வு – உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை
பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு: கூடலூரில் உலக சாதனை – 100 மாணவர்கள் தொடர்ச்சியான தற்காப்புக் கலை காட்சி
“உருக்கமான ஆடியோ வெளியீடு”: சிவகங்கை பாஜக மகளிர் அணித் தலைவி தற்கொலை முயற்சி – அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி!!