May 11, 2026

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் புதிய குரலுக்கான தேடல்’ பண்பலைத் தொகுப்பாளருக்கானநேர்முகத் தேர்வு

மதுரையில் டோக் பெருமாட்டி கல்லூரி, தமிழ் உயராய்வு நடுவத்தின் தமிழ் இலக்கியக் கழகம் சூரியன் பண்பலையும் இணைந்து நடத்தின. இந்நிகழ்விற்குத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அ.கவிதா ராணி தலைமை தாங்கினார். பண்பலைத் தொகுப்பாளர் தேர்வு குறித்த நோக்கவுரையைப் பண்பலைத் தொகுப்பாளர் சுப்ரமணிகண்டன் வழங்க அதனைத் தொடர்ந்து கண்ணன், ரூபன் கண்ணா, மீனு, விஷால் ஆகியோர் நேர்முகத் தேர்வு குறித்து விளக்கியதோடு மாணவர்களின் ஐயங்களையும் தெளிவித்தனர். முதல் சுற்றில் தேர்வான மாணவர்களின் குரலினைச் சவுண்ட் இன்ஜினியர் பிரசாத் பதிவு செய்தார். இந்நிகழ்வுக்கு 70 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். 28 மாணவர்கள் குரல் தேர்வுக்குத் தேர்வாயினர். இந்நிகழ்வை உதவிப் பேராசிரியர்கள் ஆ. சோபியா, முனைவர் ஆ. பாப்பா ஆகிய இருவரும் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

Spread the love