
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேதியரேந்தல் , செங்கோட்டை காலணி பகுதியில் 120 ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் 50 ஆண்டு காலமாக சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை மேலும் அரசியல் தலைவர்கள் வாக்கு சேகரிக்க மட்டுமே வந்துள்ளனர் மற்றபடி எங்கள் கிராமத்தில் எந்தவிதமான வசதியும் ஏற்படுத்தி தரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தங்களின் குழந்தைகள் பள்ளி கல்லூரி சென்று வருவதற்கு இரண்டு கிலோமீட்டர் கண்மாய் கரை வழியாகவே செல்வதாகவும் சரியான நேரத்தில் இந்த தூரத்தைக் கடந்து அரசு பேருந்து பிடிக்க வேண்டும். நேரம் தவறினால் மீண்டும் வீட்டுக்கு செல்கின்றனர். தங்கள் பகுதிக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டி பெண்கள் ஒரு அணியாக சேர்ந்து நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்கள் பகுதிக்கு ஒரு விடிவு வரவேண்டும் என்பதற்காகவே இப்பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டி செங்கோட்டை காலனி பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் மனு அளித்துள்ளனர். பெண்களாக அளித்த மனுவிற்கு மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை உடனடியாக செயல்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தனை ஆண்டு காலமாக அடிப்படை வசதியை பூர்த்தி செய்யாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

More Stories
விசாரணைக் கைதி மரணம் வழக்கு: மானாமதுரை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் தீவிர ஆய்வு – உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை
பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு: கூடலூரில் உலக சாதனை – 100 மாணவர்கள் தொடர்ச்சியான தற்காப்புக் கலை காட்சி
“உருக்கமான ஆடியோ வெளியீடு”: சிவகங்கை பாஜக மகளிர் அணித் தலைவி தற்கொலை முயற்சி – அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி!!