March 14, 2026

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சேலம் கோட்ட புறநகர் வழித்தடத்திற்கு 6 புதிய பேருந்து சேவைகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் சேலம், புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார்கள். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் ஆ. இராமச்சந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட மேலாண்மை இயக்குநர் ஜோசப் டயஸ். பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.

Spread the love