October 19, 2026

வங்கிகள் வேலைநிறுத்தம் எதிரொலி!தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நாளையே சம்பளம்

வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தம் காரணமாக, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இம்மாதத்துக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் நாளையே (25-ந்தேதி) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தமிழக நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.வாரத்துக்கு 5 நாட்கள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் மாத இறுதியில் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருந்தது.இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நாளையே சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதேபோல், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் நாளையே சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகமும் ஏற்கனவே வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

Spread the love