
மதுரை காந்தி அருங்காட்சியகம் ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் நவீன டிஜிட்டல் முறையில் புனரமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. வரும் 28-ந்தேதி தமிழக முதல்வர் விஜய் இதனை திறந்து வைக்க உள்ளார்.மதுரை காந்தி அருங்காட்சியகம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக புனரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருங்காட்சியகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.கடந்த ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அருங்காட்சியகம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திறப்பு விழா தள்ளிப்போனது. தற்போது வரும் 28-ந்தேதி திறப்பு விழா நடைபெற உள்ளதால், முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதையொட்டி அருங்காட்சியகம் முழுவதும் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு, இரவு நேரங்களில் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மாற்றியமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் ஒளி–ஒலி காட்சிகள் மற்றும் மின்னணு காட்சிகள் இடம்பெறுகின்றன.மதுரையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைக்க வரும் முதல்வர் விஜய், அதனைத் தொடர்ந்து காந்தி அருங்காட்சியகத்தையும் திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
அதிகார தோரணையா? அல்லது வசூல் வேட்டையா? – திருப்பத்தூர் பி.ஆர்.ஓ மீது அடுக்கடுக்கான புகார்கள்!
காந்தி ஜெயந்தி விழாவில் சிறைவாசிகளின் திறமைகள் ஒளிர்ந்தன: 600-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கல்
அரசு நிகழ்ச்சிகளில் ‘வசூல் வேட்டை’யா? அதிகார தோரணையில் திருப்பத்தூர் PRO ராஜபிரகாஷ்!