September 10, 2026

விளம்பரத்தை நம்பி வாங்கியவருக்கு அதிர்ச்சி! பழைய சோபா வழங்கியதாக பர்னிச்சர் நிறுவனம் மீது புகார் :கோவை தனியார் பர்னிச்சர் நிறுவனம் மீது குற்றச்சாட்டு!

கோவை சின்னையம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பர்னிச்சர் நிறுவனத்தில் பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், அந்நிறுவனம் தன்னை ஏமாற்றியதாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

புகாரில், ஷோரூமில் புதிய சோபா செட்டுகள் காண்பிக்கப்பட்டு, அதனை வாங்கிய பின்னர் தனது வீட்டிற்கு பழைய சோபா செட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மேலும், ஷோரூமில் காட்சிப்படுத்தப்பட்ட பொருளுக்கும், வீட்டிற்கு வழங்கப்பட்ட பொருளுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும் புகார்தாரர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து காவல்துறையினர் புகாரை பெற்று விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் விசாரணையின் முடிவிலேயே உறுதி செய்யப்படும்.இதுபோன்று வேறு யாரும் பாதிக்கப்படாமல் இருக்க, பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் போது அதன் தரம், தயாரிப்பு நிலை, பில் மற்றும் உத்தரவாத விவரங்களை முறையாக சரிபார்க்க வேண்டும் எனவும் புகார்தாரர் வலியுறுத்தியுள்ளார்

Spread the love