July 12, 2026

மதுரை மாநகராட்சி முறைகேடுகள்: யாரும் தப்பிக்க முடியாது! – அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை!!

மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று அரசினர் விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மதுரை மாநகராட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையாளரும் இணைந்து விரிவான மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.”முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் எங்கு நடந்திருந்தாலும் கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது” என அவர் உறுதியாக கூறினார்.மேலும், மாநகராட்சி முறைகேடுகளால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார். ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் கூறினார்.டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பார்கள் செயல்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்ஹார்ட் டிஸ்க் திருட்டு சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், காணாமல் போன தரவுகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை தமிழக முதலமைச்சர் தினந்தோறும் கண்காணித்து வருவதாகவும், விசாரணை நிறைவடைந்த பின் முழு விவரங்களும் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கே. அரவிந்த், மாநகர காவல் துணை ஆணையர்(வடக்கு) எஸ். மதிவாணன்,இ.கா.ப.,,மாநகர காவல் துணை ஆணையர்(போக்குவரத்து).எஸ்.வனிதா , மாவட்ட வருவாய் அலுவலர் க.அன்பழகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மாநகராட்சி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Spread the love