சிவகங்கை மாவட்டத்தில் பாஜக மகளிர் அணித் தலைவி ராஜேஸ்வரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரசியல் மற்றும் பொதுமக்கள் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணியாக கட்சியின் உள்கட்டமைப்பு பிரச்சினைகள் காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.தகவலின்படி, பாஜக சிவகங்கை மாவட்டத் தலைவர் பாண்டிதுரை,

ராஜேஸ்வரியை “போட்டோ வெளியிட” கட்டாயப்படுத்தி மனஅழுத்தம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் மனவேதனைக்குள்ளான ராஜேஸ்வரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார் எனத் தகவல்.இந்நிலையில், சம்பவத்திற்கு முன்பு மாநில மகளிர் அணித் தலைவி கவிதாவிடம் ராஜேஸ்வரி பேசியதாகக் கூறப்படும் உருக்கமான ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அதில் தற்கொலை செய்யும் முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.சம்பவம் குறித்து பாஜக மாவட்டத் தலைமையிலோ, மாநிலக் கட்சி நிர்வாகத்திலோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. காவல்துறை தரப்பில் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல். குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள மாவட்டத் தலைவர் பாண்டிதுரை தரப்பிலும் இதுவரை பதில் வெளியாகவில்லை.இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. பெண்கள் அரசியலில் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.

முக்கிய அறிவிப்பு:
தற்கொலை தடுப்பு என்பது ஒவ்வொரு சமூக உறுப்பினரின் பொறுப்பு. மனஅழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் உடனடியாக உதவி பெறுவது அவசியம்.📞 ஸ்னேகா (Sneha): 044-2464 0050📞 தமிழ்நாடு அரசு உதவி எண்: 104 உங்களின் உயிர் மதிப்புமிக்கது. .

More Stories
விசாரணைக் கைதி மரணம் வழக்கு: மானாமதுரை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் தீவிர ஆய்வு – உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை
பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு: கூடலூரில் உலக சாதனை – 100 மாணவர்கள் தொடர்ச்சியான தற்காப்புக் கலை காட்சி
புரோக்கர் பிடியில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அனிதா..!