சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் N.N.S.ஆட்டு இறைச்சி கடையினை நாகராஜன் என்பவர் நடத்தி வருகிறார் சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஆட்டிறைச்சியின் விலை 1 கிலோ 1000ரூ மற்றும் அதற்கு மேலும் அதற்க்கு குறைவாக 900ரூ இந்த விலைக்கு குறைந்து எங்குமே மட்டன் விற்கப்படுவதில்லை இவ்வாறு இருக்கும் சூழலில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நாகராஜன் என்பவர் ஆரம்ப முதல் இன்று வரை ஒரு கிலோ ரூபாய் 600 க்கு விற்று சாதனை செய்து வருகிறார்.

இவர் கூறியதாவது ஒரு ஆட்டு கறி விற்று எடுக்கும் லாபத்தை நான் 10 ஆடுகள் விற்று எடுக்கிறேன் எனக்கு அதிகப்படியான வாடிக்கையாளர்கள் உள்ளனர். அது மட்டுமல்லாது எங்களிடம் உடனுக்குடன் அறுத்த ஆடுகள் மட்டுமே சுத்தமாகவும் சுகாதாரமாகவும் விற்கப்படும். பழைய ஆட்டுக்கறிகள் என்றுமே விற்கப்பட மாட்டாது என்ற கொள்கையில் பிடிப்புடன் செயல்பட்டு வருகிறேன் நான் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவன் ஏழை எளிய மக்களும் ஆட்டு இறைச்சியை விலையை கண்டு வியக்கிறார்கள் ஒவ்வொரு கடைகளிலும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் விலையை ஏற்றிக்கொண்டே செல்கின்றனர் இந்நிலையில்ஏழு ஆண்டுகள் விலையில்எவ்விதமாற்றமின்றி ஓரே விலையில் மக்களுக்கு மருத்துவகுணம் வாய்ந்த ஆட்டிறைச்சியை வழங்கி பயன்பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த தொழிலை நடத்தி வருகிறேன். இல்லத்து விசேஷங்கள் சுபகாரியங்களுக்கும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்று வருகிறேன்.

எல்லா நாட்களுமே எங்களின் கடை காலை 5 மணி முதல் 8 மணி வரை செயல்படும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரை இறைச்சி விற்கப்படுகிறது என்ற தகவலை வழங்கினார் இந்த இறைச்சி கடைக்கு வெளியூர்களில் இருந்து வாடிக்கையாளர் ஏராளமானோர் ஒரு கிலோ வாங்கும் இடத்தில் இரண்டு கிலோ வாங்கி செல்கிறோம் என்ற ஆனந்தத்துடன் செல்கிறார்கள் என்றும் கூறினார் கடந்த ஏழு ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவு தரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்ற மன நெகிழ்வோடு தெரிவித்தார் கடையின் உரிமையாளர் நாகராஜன். கடைக்கு செல்லும் வழி சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் To தொண்டி செல்லும் நெடுஞ்சாலையில் 4 கால் மண்டபத்திற்கு அருகே அமைந்துள்ளது.தொடர்புக்கு எண்: 81100 32776 , 81100 32778.

More Stories
விசாரணைக் கைதி மரணம் வழக்கு: மானாமதுரை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் தீவிர ஆய்வு – உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை
பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு: கூடலூரில் உலக சாதனை – 100 மாணவர்கள் தொடர்ச்சியான தற்காப்புக் கலை காட்சி
“உருக்கமான ஆடியோ வெளியீடு”: சிவகங்கை பாஜக மகளிர் அணித் தலைவி தற்கொலை முயற்சி – அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி!!