திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் 25.08.2025 அன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கு பதிலாக அலுவலகத்தில் ஆப்பரேட்டராக பணி புரியும் அசோக் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சி நடைபெற்ற அன்று வேறு எந்த விதமான அரசு நிகழ்ச்சியும் நடைபெறாத சூழ்நிலையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் எங்கே சென்றனர் ? அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை விட அவர்களுக்கு வேறு என்ன முக்கிய பணி இருக்க முடியும்.

இது குறித்து நமது மாலை தந்தி நாளிதழில் முன்னதாக ஏபிஆர்ஓ எந்தவிதமான பாணியில் செயலாற்றுகிறார் பற்றிய சிறப்பு செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்தும் இன்று வரை எவ்வித மாற்றமும் இன்றி பி.ஆர்.ஓ அல்லது ஏ.பி.ஆர்.ஒ ஆகியோர் உணவுத்துறை அமைச்சர் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணிப்பது ஏன் என புரியாத புதிராகவே உள்ளது. உணவுத்துறை அமைச்சர் அரசு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு நாள்தோறும் சென்று செயல்படுத்தி வருகின்ற நிலையில் அது குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்து அரசின் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு சேர்ப்பதில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். ஆனால் இது போன்ற நிகழ்வின் பங்கேற்காமல் கல்லா கட்டுவதிலேயே தலையாக கடமையாக செயலாற்றிக் கொண்டிருக்கும் ஏ.பி.ஆர் ஓ , அவருக்கு அடங்கி ஒதுங்கி நடந்து கொண்டிருக்கும் பிஆர்ஓ போன்றவர்களின் செயல்பாடுகளால் அரசின் திட்டங்களும் பணிகளும் பொதுமக்களுக்கு தெரிவிப்பதில் மிகவும் பின்தங்கி, இவர்களின் பணிகளும் மிகவும் மோசமானதாக மாறிக் கொண்டிருக்கிறது.

For Advertisement contact: 9585323132- 9443571719
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சியின் வாயிலாக 25.08.2025 ஒட்டன்சத்திரம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது. . இதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவரும் பொருட்டு உணவு மற்றும் உணவுப்பொருள் துறை அமைச்சர் சக்கரபாணி தொழில் பயிற்சி நிலையத்தில் குத்துவிளக்கு ஏற்றி அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட போதும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து பிஆர்ஓ மற்றும் ஏ.பி.ஆர். ஓ ஆகியோர் நிகழ்வு இடத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .மேலும்அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறந்து வைத்த செய்தி பொதுமக்களுக்கும் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் தெரிவித்தால் மட்டுமே அதிகப்படியான மாணவ மாணவியர் கல்லூரியில் சேர்ந்து பயனடைய முடியும் ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற நிலையில் யாராவது ஒருவர் அமைச்சர் நிகழ்ச்சிக்கு சென்று இருக்கலாம். உணவுத்துறை அமைச்சர் நிகழ்ச்சியில் ஏற்கனவே பணம் பெற்றுக் கொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு டிமிக்கி கொடுத்ததால் அமைச்சரின் கோபத்திற்கு ஆளான ஏ பி ஆர் ஓ நிகழ்ச்சிக்கு எப்பொழுதும் செல்வதில்லை. பி ஆர் ஓ அலுவலகத்திற்கு வராத சூழ்நிலையில் இது குறித்து கேள்வி கேட்கும் பட்சத்தில் வாகனம் இல்லை என ஒரேவரியில் பதில் தெரிவிக்கின்றனர். ஆனால் தமது அலுவலகத்தில் பணிபுரியும் ஆபரேட்டரை மட்டும் எப்படி நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனை போன்று ஏ பி ஆர் ஓ வால் மட்டும் ஏன் வரமுடியவில்லை. இதே நிலை தொடர்ந்துநடந்துகொண்டிருக்கிறது. அரசு திட்டங்கள் மற்றும் செயல்பாடு கொடுத்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பது பெரும் சுனக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் லில் இது போன்ற அலுவலகம் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ? அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுவாரா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்…

More Stories
விசாரணைக் கைதி மரணம் வழக்கு: மானாமதுரை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் தீவிர ஆய்வு – உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை
பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு: கூடலூரில் உலக சாதனை – 100 மாணவர்கள் தொடர்ச்சியான தற்காப்புக் கலை காட்சி
“உருக்கமான ஆடியோ வெளியீடு”: சிவகங்கை பாஜக மகளிர் அணித் தலைவி தற்கொலை முயற்சி – அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி!!