March 14, 2026

வேலூர்- ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: திரைப்பட நடிகை அம்பிகா பங்கேற்று சிறப்புரை

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வேலூர் அடுத்த திருமலைக்கோடி, ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி குழும, ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா, கல்லூரியின் இயக்குனர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகை அம்பிகா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பட்டங்களை வழங்கினர்.

சிறப்பு விருந்தினர்களாக மாநகராட்சி மேயர் சுஜாதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலையரசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பட்டம் பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தி பாராட்டி பட்டங்களை வழங்கினர். இதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களையும் சிறப்பு விருந்தினர்களையும் ஸ்ரீ நாராயணி குழுமம் சார்பில் கௌரவிக்கப்பட்டது. திரைப்பட நடிகை அம்பிகா பட்டம் பெரும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசுகையில்:- மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் டெக்னீசியன் மனிதநேயத்துடன் சமூக உணர்வு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் நோயாளிகளுக்கு அன்பை வெளிப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என அம்பிகா பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நாராயணி குழுமம் மற்றும் ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரி முதல்வர், மருத்துவர் கீதா இனியன், சமரசம், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவினை சிறப்பித்தனர்.

Spread the love