தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பாக வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பபோட்டிமருதுபாண்டியர்நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.தமிழக அந்தஸ்து தொடர்ந்து 3 முறை பெற்ற மானாமதுரை சீனி ஆசான் சிலம்ப பள்ளி மாணவ மாணவிகள் 4 ஆவது முறை மாநில போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்தனர்.

சிவகங்கை மாவட்டம் – மானாமதுரை – சீனி ஆசான் சிலம்ப பள்ளியை சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஒற்றைக்கம்பு பிரிவில் அகதீஸ்குமார், மதன்குமார், சுவாதி, ஷாலினி முதல் இடத்தையும், ஆதித்யா, ஹரிணி இரண்டாம் இடத்தையும், இரட்டைக்கம்பு பிரிவில் ரித்தீஷ், புகழேஷ், ரோஷினி, முதல் இடத்தையும், அரிபாலா, ஹர்ஷிதா இரண்டாம் இடத்தையும்,

தொடுமுறை பிரிவில் கரண், ஷெரோன் முதல் இடத்தையும், சூர்யா மூன்றாம் இடத்தையும் பெற்று தொடர்ந்து 3 முறை தமிழக அளவில் அந்தஸ்து பெற்று 4 ஆவது முறையாக மாநில சிலம்ப போட்டிக்கு தகுதி பெற்று பயின்று வந்த சீனி ஆசான் சிலம்ப பள்ளிக்கும், பயிற்சியாளர்கள் செல்வம் மற்றும் முனியாண்டி அவர்களுக்கும் பெருமை சேர்த்த மாணவ மாணவிகளையும் பெற்றோர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்…


More Stories
பேருந்துக்குள் நவீன அறுவை சிகிச்சை பயிற்சி!மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தில் முதன்முறையாக ஏற்பாடு
காவிரி–குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கக் கோரி மதுரையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!!
அதிகாரிகளுடன் அமைச்சரின் தந்தை ஆய்வு? காரைக்குடி அருகே STP பணியில் சர்ச்சை… பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு!