உணவகங்களில் தரம் இல்லாத உணவு கிடைப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு !!
சிவகங்கை மாவட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உணவகங்களில் தரம் இல்லாத உணவுகள் கிடைப்பதாகவும்அவ்வாறு வழங்கப்படும் உணவுகள் குறித்து உணவு கட்டுப்பாட்டு துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த தகவலும் பெறவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது அது மட்டும் அல்லாது சிவகங்கை பகுதியில் முறையான ஆய்வு மேற்கொள்ளவில்லை என்றும் ஆழ்ந்த உறக்கத்தில் உணவு கட்டுப்பாட்டுத்துறை இருக்கிறது என்றும் சமூக ஆர்வலர் மட்டும் பொதுமக்கள் கூறி வருகின்றனர் மருத்துவக் கல்லூரி பகுதிகளில் கடந்த காலங்களில் உணவு கட்டுப்பாட்டு துறையினர் தவறாது தினமும் ஆய்வு மேற்கொண்டு வண்ணம் உள்ளனர் தற்பொழுது மாவட்ட உணவு கட்டுப்பாட்டு அதிகாரி காரைக்குடியில் இருப்பதால் சிவகங்கையில் பணியாற்றும் அனைவரையும் காரைக்குடி பகுதியில் ஆய்வு மேற்கொள்ளுங்கள் சிவகங்கை கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறுவதாகவும் அலுவலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

சிவகங்கை செயல்பட்டு வரும் அலுவலகத்திற்கு மாவட்ட உணவு கட்டுப்பாட்டு அதிகாரி வருவதே இல்லை என்றும் கூறுகிறார்கள் சிவகங்கை நகர் அரண்மனை வாசல் பகுதியில் ஏராளமான உணவகங்கள் உள்ளன அதில் பல ஏழை எளிய மக்கள் உணவு உட்கொண்டு வருகிறார்கள் அது தரம் இல்லாத எண்ணெய் மற்றும் காலை உணவை மதியம் பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறப்படுகிறது இவ்வாறு இருக்கும் சூழலில் உணவு கட்டுப்பாட்டு துறை முறையாக ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிப்பு தவறாக செயல்படும் கடைகளுக்கு சீல் வைப்பது மட்டுமே அவர்களின் பணியாக இருக்கும் . ஆனால் அப்பணியை அவர்கள் சரிவர செய்வதில்லை கடை ஒன்றிக்கு ரூபாய் ஆயிரம் விதம் வசூல் செய்து பெரிய முதலீடு ஈட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது கடையின் உரிமையாளர் மற்றும் கடைகளை பொறுத்தே இதன் விகிதம் மாறுபடுகிறது .

ஆதலால் பொதுமக்கள் உணவு சாப்பிட்டு எக்கேடு கேட்டால் என்ன ? அவர்கள் வயிறு கெட்டாலும் பரவாயில்லை எங்கள் வயிறு மட்டும் நிறைந்தால் போதும் என்று செயல்படுகிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை..

More Stories
விசாரணைக் கைதி மரணம் வழக்கு: மானாமதுரை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் தீவிர ஆய்வு – உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை
பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு: கூடலூரில் உலக சாதனை – 100 மாணவர்கள் தொடர்ச்சியான தற்காப்புக் கலை காட்சி
“உருக்கமான ஆடியோ வெளியீடு”: சிவகங்கை பாஜக மகளிர் அணித் தலைவி தற்கொலை முயற்சி – அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி!!