
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவா பகத்சிங் என்ற இளைஞர் வயிற்று வலியின் காரணமாக சிகிச்சை பெற அரசு மருத்துவனையில் வந்துள்ளார் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை அவர் வாங்கியுள்ளார் பின்னர் அங்கு வழங்கப்பட்ட மாத்திரைகள் சாப்பிட்ட சிவாவிற்கு வயிற்று வலி மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் மாத்திரையை பார்த்த போது அது காலாவதியானது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிவா மருத்துவமனைக்கு சென்று மருந்தக ஊழியர்களிடம் தனக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் காலாவதி தேதி முடிவடைந்ததை குறிப்பிட்டுள்ளார். அவசரமாக உணர்ச்சிவசப்பட்டு கேட்டதால் அவ் ஊழியர் அவர் பெயரை கூட தெரிவிக்கவில்லை இதுகுறித்து தலைமை மருத்துவர் அசாருதீன் உடன் தொடர்பு கொண்டு கேட்டபோது கடந்த மாதம் தான் தேசிய தர நிர்ணய சான்று குழுவினர் ஆய்வுக்கு வந்ததால் மருந்தகத்தில் உள்ள அனைத்து மருந்துகளையும் சோதனை செய்தனர். அதன் பின்னரே நோயாளிகளுக்கு வழங்குவதாக ஒரு சில நாளிதழுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் முறையாக சோதனை செய்யவில்லை!! என்பதை இது குறிப்பிடுகிறது காலாவதியான மாத்திரைகள் இருந்தால் அதை அப்புறப்படுத்தாமல் நோயாளிகளுக்கு பின்பு எப்படி வழங்கப்பட்டது மர்மமாக உள்ளது. மாத்திரை வழங்குவது மட்டும் காலாவதி உள்ளதா அல்லது இன்னும் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளனவா? … என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பலமுறை டாக்டர்கள் பற்றாக்குறை இருந்த போது நோயாளிகள் அவதிவுற்றறனர் ஆனால் தற்போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகளில் காலாவதி என்பதால் பொதுமக்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்வாரா? என கேள்வி எழுந்துள்ளது.


More Stories
பேருந்துக்குள் நவீன அறுவை சிகிச்சை பயிற்சி!மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தில் முதன்முறையாக ஏற்பாடு
காவிரி–குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கக் கோரி மதுரையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!!
அதிகாரிகளுடன் அமைச்சரின் தந்தை ஆய்வு? காரைக்குடி அருகே STP பணியில் சர்ச்சை… பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு!