அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காந்திநகர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் மு.பாபு, மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், மண்டல குழு தலைவர்கள் ரா.நரேந்திரன், யூசுப்கான், வ.புஷ்பலதா வன்னியராஜா, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சா.திருகுணஐயப்பத்துரை, இணைப்பதிவாளர்கள் இராமதாஸ், தக்ஷசந்தானம், துணை பதிவாளர் வேலூர் சரகம் சுரேஷ்குப்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
அதிகாரிகளுடன் அமைச்சரின் தந்தை ஆய்வு? காரைக்குடி அருகே STP பணியில் சர்ச்சை… பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு!
முன்னாள் இராணுவ வீரரின் உடல் மருத்துவக் கல்விக்காக தானம் – சிவகங்கை மருத்துவக் கல்லூரி பாராட்டு
மதுரை மாநகராட்சி முறைகேடுகள்: யாரும் தப்பிக்க முடியாது! – அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை!!