September 4, 2026

ஒரே நாளில் 16 புதிய கிளைகள்!தமிழ்நாட்டில் தடம் பதிக்கும் கரூர் வைஸ்யா வங்கி

கரூர் வைஸ்யா வங்கி (KVB) தனது சேவைப் பரப்பை விரிவுபடுத்தும் வகையில் ஒரே நாளில் 16 புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 919 ஆக உயர்ந்துள்ளது.தமிழ்நாட்டில் சென்னை திருமங்கலம், ஈரோடு சித்தோடு, சிவகங்கை, காஞ்சிபுரம் செவிலிமேடு, சேலம் அம்மாபேட்டை மற்றும் ஜாகீர் அம்மாபாளையம் உள்ளிட்ட 6 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. வர்த்தகம், தொழில் மற்றும் கிராமப்புறங்களை மையப்படுத்தி இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயலாக்க அதிகாரியுமான ரமேஷ் பாபு, ஹைதராபாத் கச்சிபௌலியில்புதிய கிளைகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கம் மூலம் உள்ளூர் வாடிக்கையாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME), விவசாயிகளுக்கு பிரத்யேக நிதித் தீர்வுகளை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.ஜூன் 30, 2026 நிலவரப்படி KVB-யின் மொத்த வணிகம் ₹2.27 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மேலும், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் ₹756 கோடி நிகர லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. 1916-ல் தொடங்கப்பட்ட இவ்வங்கி தற்போது 2,169 ஏடிஎம்கள் மற்றும் ‘KVB DLite’ செயலி மூலம் சேவைகளை வழங்கி வருகிறது.

Spread the love