
மதுரைபுகழ்பெற்ற தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக தனது 90-வது வயதில் இன்று (11.09.2026) மதுரையில் காலமானார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிலும், பட்டிமன்ற ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தில் 1936-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி பிறந்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டமும், தியாகராஜர் கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றார்.பேராசிரியராக பணியாற்றியவர்1961 முதல் 1994-ம் ஆண்டு வரை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றினார். ஆழமான தமிழ் இலக்கியக் கருத்துகளை எளிய, இனிய தமிழில் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்ததில் தனி முத்திரை பதித்தார்.பட்டிமன்றத்தின் அடையாளம்30 ஆண்டுகளுக்கும் மேலாக மேடைகள் மற்றும் தொலைக்காட்சிகள் வாயிலாக ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களை நடத்தி, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அவரது நகைச்சுவை கலந்த பேச்சும், தெளிவான தமிழும் பட்டிமன்ற உலகில் அவருக்கென தனி அடையாளத்தை உருவாக்கியது.திருக்குறள், கம்பராமாயணம் உள்ளிட்ட இலக்கியப் படைப்புகளுக்கும் எளிய முறையில் உரை எழுதியுள்ளார். மேலும், முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

More Stories
விளம்பரத்தை நம்பி வாங்கியவருக்கு அதிர்ச்சி! பழைய சோபா வழங்கியதாக பர்னிச்சர் நிறுவனம் மீது புகார் :கோவை தனியார் பர்னிச்சர் நிறுவனம் மீது குற்றச்சாட்டு!
பேருந்துக்குள் நவீன அறுவை சிகிச்சை பயிற்சி!மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தில் முதன்முறையாக ஏற்பாடு
காவிரி–குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கக் கோரி மதுரையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!!