அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல் புகார்: வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாக வெளியாகியுள்ள புகார்களுக்கு முழுமையான விசாரணை நடத்தி, தகுதியின் அடிப்படையில் வெளிப்படையான நியமன நடைமுறையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அரசு வழக்கறிஞர் நியமனங்களுக்காக ஆளுங்கட்சியினரிடமே லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள், ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், சில அமைச்சர்கள் தொடர்பாக அண்மையில் எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் புகார்களுக்கு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், பொதுவெளியில் வெளியான குற்றச்சாட்டுகள் மீது அரசு அமைதியாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்து அமைச்சர்கள் வெளியிடும் கருத்துகள் விசாரணையை திசைதிருப்பும் வகையில் இருப்பதாகவும், இதுகுறித்தும் முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.வாணியம்பாடியில் குற்ற வழக்கில் தொடர்புடையவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி வழங்கப்பட்டதாகவும், அரசு வழக்கறிஞர் நியமனங்களுக்காக பணம் வசூலிக்கப்பட்டதாகவும் வெளியாகும் தகவல்கள் கவலை அளிப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.எனவே, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எழுந்துள்ளதாகக் கூறப்படும் புகார்களை சுயாதீனமாக விசாரித்து, முறைகேடுகள் உறுதியானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தகுதியான வழக்கறிஞர்களை மட்டுமே வெளிப்படையான முறையில் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

More Stories
“அமைச்சர் பெ.விஸ்வநாதன் மீது பொய் புகார்; ஆர்.எஸ்.எஸ். வெறுப்பரசியலின் வெளிப்பாடு” – மாணிக்கம் தாகூர் கடும் தாக்கு!
“எங்களை துடைத்தெறிய முடியாது” – டெல்லி போராட்டத்தில் கஜக நிறுவனர் அபிஜித் தீப்கே முழக்கம்
பிரதமரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்” – வெளியான தகவல்!