நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு
வேலூர் நவ -9
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, வள்ளிமலை, ஜி ஆர் பி தனியார் திருமண மண்டபத்தில் ஆட்சியர் தலைமையில் நலத்திட்ட விழா, மக்களுடன்முதல்வர் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 798 பயனாளிகளுக்கு ரூ.10.91 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், வேலூர் மாநகராட்சி துணை மேயர் மா.சுனில்குமார், 1 வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் எஸ்.சரவணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கலைவாணி பாபு, ஒன்றிய குழு உறுப்பினர் சுஜாதா கருணாகரன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
“அமைச்சர் பெ.விஸ்வநாதன் மீது பொய் புகார்; ஆர்.எஸ்.எஸ். வெறுப்பரசியலின் வெளிப்பாடு” – மாணிக்கம் தாகூர் கடும் தாக்கு!
“எங்களை துடைத்தெறிய முடியாது” – டெல்லி போராட்டத்தில் கஜக நிறுவனர் அபிஜித் தீப்கே முழக்கம்