December 14, 2025

இலங்கை பள்ளிகளில் வேலை நாட்கள் குறைப்பு :ஜனவரி – 27ல் புதிய கல்வி ஆண்டு தொடக்கம்

இலங்கையில் உள்ள பள்ளிகளில் ஜனவரி தொடங்கி அந்த ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் வரை ஒர் கல்விஆண்டாககணக்கிடப்படுகிறது 99.ஆனால் அங்குள்ள பள்ளிகளில் நாளை (ஜன-02) முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி வேலைநாட்களில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் 2025ம் ஆண்டிற்கான கல்வி வேலைநாட்களுக்கான அட்டவணையை கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் பள்ளி வேலை நாட்களை 210 நாட்களில் இருந்து 181 நாட்களாக குறைத்துள்ளது.
திருத்தப்பட்ட இந்த அட்டவணை, அங்குள்ள அனைத்து அரசு-தனியார் பள்ளிகள், புத்த துறவி மடாலயங்களுக்கு பொருந்தும். மேலும் வருகின்ற ஜனவரி 27-ந் தேதி முதல் புதிய கல்வியாண்டுதொடங்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love