திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள செய்தி மக்கள்தொடர்பு துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் உதவி செய்திமக்கள்தொடர்பு அலுவலர் செய்தியாளர்கள் பெயரைச் சொல்லி பல இடங்களில் பண மோசடி செய்வது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளை வெளியீட செய்து பின்பு அதை கட்டப்பஞ்சாயத்து வைத்து பணம் பரிமாற்றம் செய்வது போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல நாளிதழில் வெளிவந்து கொண்டிருக்கின்றன அது மட்டும் அல்ல செய்தியாளர்கள் பெயரைச் சொல்லி அமைச்சர் பெருமகனாரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு தானே விழுங்கி கொள்வதும் குறிப்பிட்ட நாளிதழ்களில் மட்டும் பணத்தைப் பெற்றுக் கொண்டு விதிமுறைகளை மீறி விளம்பரம் அளித்தது போன்ற பல்வேறு செயல்களை செய்து வருகிறார்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து செய்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.அது மட்டுமல்லாமல் திண்டுக்கல் மாவட்ட பிஆர்ஓ பேச்சை கேட்பதே இல்லை என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டாலும் என்னை இந்த மாவட்டத்தில் இருந்து மாற்ற இயலாது என்று சூழுரைத்து வருவதாகவும் செய்தியாளர்கள் கூறுகின்றனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு உரிய முறையான மரியாதை அளிப்பதில்ல. ஆண்டுதோறும் நடைபெறும் மலர் கண்காட்சியில் ஏராளமான பண பரிவர்த்தனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வருமானவரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேரடி ஆய்வு செய்து அவரின் சொத்து மதிப்புகளை ஆய்வு செய்தால் பல திடுக்கிடும் தகவல்கள்!!! வெளிவரும் என்பது ஐயம் இல்லை என்றும் கூறுகிறார்கள். செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பெருமகனார் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் உடனடி நடவடிக்கை எடுப்பார் – களா?… என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும் செய்தியாளர்கள்.


More Stories
விசாரணைக் கைதி மரணம் வழக்கு: மானாமதுரை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் தீவிர ஆய்வு – உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை
பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு: கூடலூரில் உலக சாதனை – 100 மாணவர்கள் தொடர்ச்சியான தற்காப்புக் கலை காட்சி
“உருக்கமான ஆடியோ வெளியீடு”: சிவகங்கை பாஜக மகளிர் அணித் தலைவி தற்கொலை முயற்சி – அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி!!