December 15, 2025

விருதுநகர் காவல்துறையினரின் துரித நடவடிக்கை:செயின் பறிப்பு குற்றவாளி 1 மணி நேரத்துக்குள் கைது

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள்கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் வெம்பக்கோட்டை காவல் நிலையம் சரகம், தாயில்பட்டி பச்சையாபுரம் கிராமத்தில் வசித்து வரும் மாரியம்மாள் என்பவர் கடந்த 20.08.2025ம் தேதி பணிக்காக தான் பணிபுரியும் கம்பெனிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் இரு சக்கர வாகனத்தில் வந்து விலாசம் கேட்பது போல் மாரியம்மாளின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டார். பின்பு மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சாத்தூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் தலைமையில் காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ள CCTV கேமிராக்களை ஆய்வு செய்து எதிரியை தேடி வந்த நிலையில்,

சிவகாசி நாராணபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் மதன்குமார் (23) என்பவர் மேற்படி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது என தெரியவந்த நிலையில் உடனடியாக கைது செய்து, விசாரணையில் பறித்து சென்ற சுமார் 5 பவுன் தங்க நகைகளையும், சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றி, மேற்படி குற்றவாளியைநீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேற்படி செயின் பறிப்பு சம்பவம் நடந்த 1 மணி நேரத்திலேயே அடையாளம் கண்டு விரைவில் கைது செய்தும், பாதிக்கப்பட்டவரின் சொத்தை மீட்டுதந்த பணிக்காக காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினர்.மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் மூலம் தண்டனைகள் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Spread the love