December 15, 2025

விருதுநகர் மாவட்டத்தில் பட்ட பகலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் உடனடி கைது

விருதுநகர் மாவட்டத்தில்
கடந்த 28.08.2025ம் தேதியில் ஆமத்தூர் காவல் நிலையம் சரகம், ஓ.சங்கரலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் நாகராணி (48) என்பவர் பள்ளிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சங்கர் கணேஷ் பயர் ஒர்க்ஸ் அருகில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் பதிவு எண் இல்லாத மாருதி சுசுகி காரில் வந்து வழிமறித்து நாகராணி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயின், பணம் ரூ.1500 மற்றும் 2 மொபைல் போன்களை பறித்து கொண்டு தப்பிவிட்டனர். பின்பு நாகராணி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வந்த நிலையில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் விருதுநகர் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து சம்பவ இடத்தில் உள்ள CCTV கேமிராக்களை ஆய்வு செய்து தேடி வந்த நிலையில், கிடைத்த தகவலின் படி 1. பாலகுமார் (29) முருகப்பேட்டை, திருச்சி மாவட்டம், 2. அஜித்குமார் (28), ம.பாலபட்டி, சேலம் மாவட்டம் 3.சுரேஷ் (21) திருநெல்வேலி ஆகியோர்களை திருமங்கலம் சுங்கச் சாவடி அருகே வைத்து 29.08.2025ம் தேதி பிற்பகல் கைது செய்தனர் .விசாரணை மேற்படி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவ்வழக்கின் விசாரணையில், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு, பின்னர் தப்பிச் சென்ற குற்றவாளிகள் கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது. தொடர் திருட்டில் ஈடுபட்ட மேற்படி குற்றவாளிகளை காவல்துறையினரின் துரித விசாரணையில் தாமதமின்றி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்த பொருட்கள் 6 சவரன் எடையுள்ள தாலியுடன் கூடிய தங்க செயின்-1,
25 பவுன் எடையுள்ள தங்க மோதிரம்-1,
தங்க டாலர்-1,
கைக்கடிகாரம்-4,
ஆண்ட்ராய்டு போன்-2,
அரிவாள்-6,
இரும்பு கம்பி-3,
பணம் ரூ.20,000/- சம்பவத்திற்கு பயன்படுத்திய Baleno நான்கு சக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தவுள்ளனர்.

மேலும் மேற்படி விசாரணையில் ஓசூர் நகர் காவல் நிலையத்தில் நடந்த இரட்டை கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் நோக்கத்திற்காக அரிவாள் வைத்திருந்தது தெரியவந்தது. துரிதமாக கைது செய்ததின் மூலம் பழிக்கு பழி வாங்கும் கொலை சம்பவமானது தடுக்கப்பட்டது. மேலும் மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய 3 குற்றவாளிகளைதேடி வருகின்றனர். மேற்படி செயின் பறிப்பு சம்பவம் நடந்த 24 மணி நேரத்திலேயே எதிரிகளை அடையாளம் கண்டு விரைவில் கைது செய்தும், பாதிக்கப்பட்டவரின் சொத்தை மீட்ட மெச்ச தகுந்த பணிக்காக காவல் கண்காணிப்பாளர் மேற்படி சிறப்பு தனிப்படையை வெகுவாக பாராட்டினர்.மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் மூலம் தண்டனைகள் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

For Advertisement contact: 9585323132- 9443571719

Spread the love