December 14, 2025

மானாமதுரை அரசு டாஸ்மாக் கடையில் திருட்டு சம்பவம் ஒருவர் கைது: போலீஸ் விசாரணை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அரசகுழி மயானம் செல்லும் சாலையில் (7542)அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. நேற்று வழக்கம் போல பணியாளர்கள் இறுதி இருப்பை கணக்கெடுத்து விட்டு கடையை அடைத்துச் சென்றனர்.நள்ளிரவு நேரத்தில் 11.50 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடையின் முன் ஷட்டரை உடைத்து மது பாட்டில்களை மற்றும் இருப்பில் இருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் அங்கிருந்து தடயங்கள் சேகரிக்கப்படாமல் இருப்பதற்கு கடையை தீயிட்டுக் கொளுத்தி ரூ23 லட்சம் மதிப்பீட்டிலான மதுபான பாட்டில்கள் தீயில் எறிந்தாக கூறப்பட்டது. மதுபான கடையில் இருந்த அலாரம் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மூலம் விரைந்து வந்து நீண்ட நேரத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த மர்ம செயலில் ஈடுபட்ட நபர்களை மானாமதுரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் காவல் ஆய்வாளர் ரவீந்திரன் தலைமையிலான சிறப்பு தனி படைகள் காவல் சார்பு ஆய்வாளர் குகன் ஆகியோர் துரித நடவடிக்கையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக் கிராமத்தைச் சேர்ந்த கௌதமன் என்ற இளைஞர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் கைது செய்து முதற் கட்டமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிக அளவில் மதுபோதையில் இருந்ததால் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கௌதமன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுவருகின்றது.

Spread the love