
நேபாளத்தில் உலகளாவிய தொழிற்சங்கமான பன்னாட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் தெற்காசிய மாநாடு நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது.இம்மாநாட்டில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவர் த.அமிர்தகுமார் கலந்து கொண்டு பேசினார்.இம்மாநாட்டில் ஜப்பானில் பணிபுரியும்பொதுப்பணியாளர்கள் அனைவருக்கும் தொழிலாளருக்கான அடிப்படை உரிமை வழங்க வேண்டி தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவர் த.அமிர்தகுமார் முன்மொழிந்த இத்தீர்மானத்தை அனைவரும் வழிமொழிந்ததால் இத்தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு,நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் இந்தியா,இலங்கை,பாகிஸ்தான்,வங்காளதேசம்,நேபாளம்,மலேசியா,சிங்கப்பூர்,மியான்மர்,தாய்லாந்து,இந்தோனேசியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நேபாளத்தில் தற்போது கலவரங்கள் கட்டுக்கடங்காமல் உள்ள நிலமையையும் பரிசீலித்த இம்மாநாடு இது தொடர்பாகவும் சிறப்பு தீர்மானம் முன்மொழிந்து அத்தீர்மானமும்நிறைவேற்றப்பட்டது.

More Stories
மீண்டும் வான்வெளி விபத்து !உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி !
தலை மறைவாக இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் : கடல் மார்க்கமாக இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பு! NIA தேடுதல் வேட்டை …
சோஃபியா குரேஷி பற்றி சர்ச்சை கருத்து: பாஜக அமைச்சர் மீது வழக்குப் பதிய உத்தரவு –