December 14, 2025

திண்டுக்கல் அருகே சாலையோரம் கொட்டப்பட்டு இருக்கும் கெட்டுப்போன? கொய்யா- மூட்டை மூட்டையாக அள்ளிச்செல்லும் பொதுமக்கள் !!

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே ராஜகோபாலபுரம் பகுதியில் திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் மர்ம நபர்களால் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டிருக்கும் கெட்டுப்போன? கொய்யா.பொதுமக்கள் மூட்டை மூட்டையாக எடுத்து செல்கின்றனர். மேலும் விலங்குகள் சாப்பிடுகின்றன.அருகே உள்ள பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவர்களும் எடுத்து சாப்பிடுகின்றனர்.ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் முன்பு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Spread the love