March 14, 2026

சிவகங்கை வீர விதை சிலம்பம் அணி கலை வளர்மணி டாக்டர் பெருமாள் தலைமையில் கேரளாவில் பதக்கங்களை பெற்று சாதனை

மானாமதுரை -கேரளா மாநிலம் கொல்லத்தில் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டம் சார்பாக வீரவிதை சிலம்ப அணி கலை வளர்மணி டாக்டர் பெருமாள் தலைமையில் பங்குபெற்று 15 தங்க பதக்கங்களையும், மூன்று வெள்ளிப்பதக்கங்களையும் வென்றனர்.10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில்
தேசிகா ஸ்ரீ தங்கப்பதக்கமும், 12 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கர்னித், யோவன் அஸ்வா, அரிஸ்வரன் தங்கப்பதக்கமும், ஹரிசுதன் வெள்ளிப் பதக்கமும், 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் நிரஞ்சன், ராஜ்குமார், மதன்குமார், கிருத்திஷ், ரிஷ்வந்த், அகிலேஷ்வரன்,விஷ்வந்த், தேவனேஷ்வரன் தங்கப்பதக்கமும், யஸ்வந்த் வெள்ளிப் பதக்கமும்,பெண்கள் பிரிவில் வர்ஷினி,ஹரிதர்ஷினி தங்கப்பதக்கமும், 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் அருண்பாண்டி தங்கப்பதக்கமும், பெண்கள் பிரிவில் தேஜஸ்வினி வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்து அணிக்கு பெருமை சேர்த்தார்கள்.வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோர்கள் மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து வரவேற்றனர்.

Spread the love