சிவகங்கை பொதுமக்கள் நலன் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கம் சார்பில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

அதில் சிவகங்கை நகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து வெறி பிடித்த நாய்கள் மற்றும் தொற்று பிடித்த நாய்கள் உலா வருவதால் நடந்து மற்றும் வாகனங்கள் செல்பவர்களை அச்சுறுத்தி துரத்துகிறது இருசக்கர வாகனங்களில் செல்வோர் பதட்டத்தில் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது இதனால் பல உயிர் இழப்பு ஏற்படுகிறது.

சாலை மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவது அடங்கும் மேலும் ஒரு சில பகுதியில் பன்றிகள் சுற்றித் திரிவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது இதனை கருத்தில் கொண்டு மேலும் சிவகங்கை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு முதல் நடவடிக்கையாக (வெறி பிடித்த)தெரு நாய்கள்மற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தது மேலும் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு அப்பர் தெரு ஜோசப் ஸ்கூல் அருகில் மழைநீர் வாய்க்கால் சில நாட்களாக தூர்வாரப்படாமல் இருந்து வருகிறது மேலும் இதில் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் நோய் ஏற்படும் சூழ்நிலை உள்ளது , நேர் பஜார் தினசரி மார்க்கெட் செல்லும் வலியை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையாக இருப்பதால் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தது. இந்நிகழ்வில் தலைவர் சுரேஷ்குமார் செயலாளர் ராஜாஅமுதன் பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


More Stories
விசாரணைக் கைதி மரணம் வழக்கு: மானாமதுரை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் தீவிர ஆய்வு – உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை
பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு: கூடலூரில் உலக சாதனை – 100 மாணவர்கள் தொடர்ச்சியான தற்காப்புக் கலை காட்சி
“உருக்கமான ஆடியோ வெளியீடு”: சிவகங்கை பாஜக மகளிர் அணித் தலைவி தற்கொலை முயற்சி – அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி!!