மதுரை மாநகர மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் முன்விரோதம் காரணமாக மதுரை செல்லூரை சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகன் தங்கப்பாண்டி என்ற கோல்ட் வயது (22) என்பவர் 20.05.2025 அதிகாலையில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் காவல் துறையினரின் புலன் விசாரணையில் தங்கப்பாண்டி என்பவரை முன்விரோதம் காரணமாக செல்லூர் மேலத்தோப்பு பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவரது மகன் பிரவீன் குமார் வயது 19. அங்கன் என்பவரது மகன் அவினின்ரன் வயது 19, நரிமேடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகள் சிவப்பிரியா வயது 19 மற்றும் மூன்று இளம் சிறார்கள் சேர்ந்து கொலை செய்தது தெரிய வரவே மேற்கண்ட அனைவரையும் கைது செய்தும் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுத்தியும், இளம் சிறார்களை அரசு கூர்நோக்கு இல்ல பாதுகாப்பில் வைக்க அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் தீவிர புலன் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட கொலையாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை காவலர்களை காவல் ஆணையர் லோகநாதன் வெகுவாக பாராட்டினார்.

More Stories
காவல்அதிகாரி மீதான பிடியாணை ரத்து :சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விருதுநகர் மாவட்டத்தில் பட்ட பகலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் உடனடி கைது
விருதுநகர் காவல்துறையினரின் துரித நடவடிக்கை:செயின் பறிப்பு குற்றவாளி 1 மணி நேரத்துக்குள் கைது