
மதுரை ரயில்வே கிழக்கு நுழைவாயில் பகுதியில் போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது. மதுரை ரயில்வே சந்திப்பு கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் போக்குவரத்து துணை ஆணையர் S வனிதா அவர்கள் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது இந்த விழிப்புணர்வில் விபத்து தவிர்ப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய படங்களை 150 அடி நீளத்திற்கு பிளக்ஸ் பேனரில் கல்லூரி மாணவர்கள் சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர் இந்நிகழ்வில் போக்குவரத்து உதவி ஆணையர் S.இளமாறன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி மற்றும் மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் நிர்வாகி சண்முகசுந்தரம் மற்றும் பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

More Stories
காவல்அதிகாரி மீதான பிடியாணை ரத்து :சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விருதுநகர் மாவட்டத்தில் பட்ட பகலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் உடனடி கைது
விருதுநகர் காவல்துறையினரின் துரித நடவடிக்கை:செயின் பறிப்பு குற்றவாளி 1 மணி நேரத்துக்குள் கைது