
கமல்ஹாசன் – மணிரத்னம் 36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் அலி பசல் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5-ந் தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.கடந்த செப்டம்பரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது .படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் ‘தக் லைப்’ படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டது. இயக்குனர் மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் கமல ஹாசன் ஆகியோர் வீடியோவில் இடம்பெற்றுள்ளனர். ‘பந்தலுக்கு ஈசான மூலை’ என்கிற பாடல் வரிகளைக் குறித்து கமல்ஹாசன் கேட்கிறார். கமல்ஹாசன் குரலில் இப்பாடல் உருவாகலாம் என வீடியோ மூலம் தெரிகிறது.இந்நிலையில் ‘தக் லைப்’ படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என புதிய போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது..

More Stories
தலைவன் தலைவி விமர்சனம்: காதலும் மோதலுமான கணவன் – மனைவி! எப்படி ?
குபேரா விமர்சனம்: மாறுபட்ட வேடத்தில் ‘அபாரமான நடிப்பை’ வெளிப்படுத்திய தனுஷ்
தக் லைஃப்: நாயகன் கூட்டணி 38 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சாதித்ததா?