செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றிய முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் நந்திவரம் கூடுவாஞ்சேரி முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மாநாடு எம்.கே.தண்டபாணி மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு தண்டபாணி வசந்தி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தலைமை தாங்கினார் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜி.கே.லோகநாதன் நகர மன்ற உறுப்பினர்கள் நகர திமுக நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்துகொண்டு பத்து பேருக்கு நான்கு சக்கர தள்ளுவண்டி வாகனம் 12 பேருக்கு தையல் இயந்திரம் 10 பேருக்கு இஸ்திரி பெட்டி ஆகிய உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முன்னதாக கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் தண்டபாணி நினைவிடம் வரை மௌன ஊர்வலம் நடந்தது இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..


More Stories
விசாரணைக் கைதி மரணம் வழக்கு: மானாமதுரை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் தீவிர ஆய்வு – உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை
பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு: கூடலூரில் உலக சாதனை – 100 மாணவர்கள் தொடர்ச்சியான தற்காப்புக் கலை காட்சி
“உருக்கமான ஆடியோ வெளியீடு”: சிவகங்கை பாஜக மகளிர் அணித் தலைவி தற்கொலை முயற்சி – அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி!!