March 14, 2026

பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு: கூடலூரில் உலக சாதனை – 100 மாணவர்கள் தொடர்ச்சியான தற்காப்புக் கலை காட்சி

நீலகிரி மாவட்டம் – கூடலூர் தேவாலா – ஹோலி கிராஸ் கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்டர்நேஷனல் ப்ரைடு புக்ஸ் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் சவுலின் டெம்பிள் ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் இணைத்து நடத்திய உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இதில் 16 மாணவ மாணவிகள் வெவ்வேறு விதமான தனிநபர் உலக சாதனை செய்தனர்.

அவற்றுடன் சுமார் 100 மாணவர்கள் குழுவாக இணைந்து 1 மணிநேரம் 26 வினாடி தொடர்ந்து தற்காப்புக் கலை பயிற்சி செய்து, பெண் குழந்தை பாதுகாப்பு தலைப்பின் கீழ் பல்வேறு விதமான தற்காப்பு கலைகள் செய்து சாதனை படைத்தனர். உலக சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு இளம் சாதனையாளர் விருது மற்றும் இன்டர்நேஷனல் பிரைட் புக்ஸ் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் உலக சாதனை சான்றிதழ்களும் வழங்கி கௌரவம் செய்யப்பட்டது.

இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக ஹோலி கிராஸ் கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் இனிகோ மேரி கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்றும் இன்டர்நேஷனல் பிரைடு புக்ஸ் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இன்டர்நேஷனல் டைரக்டர் கிராண்ட் மாஸ்டர். அம்பாசிடர் டாக்டர். பிரதீப் சந்திரதாஸ் கலந்து விழாவினை துவக்கி வைத்தார். உடன் தமிழ்நாடு மாநில செயலாளர் விக்னேஷ் விழாவில் கலந்து சிறப்பித்தார். இதில் உதகை, மதுரை, கோவை, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்று சாதனை புரிந்தனர். மதுரை உயர் நீதிமன்றத்தில் இருந்து வழக்கறிஞர் ஷீலா ஜெர்லின் மேரி மற்றும் சென்னையில் இருந்து காவல் துறை முன்னால் அதிகாரியும், கராத்தே உலக சாதனையாளர் ஜப்பான், மலேஷியா, இலங்கை , தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற கராத்தே புரட்சி வெல்லும் என்ற வீரர் ஐயா தனசேகரன் இணைந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர். சவுலின் டெம்பில் ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி இன் நிறுவனர் மற்றும் எக்ஸாமினர், ஆசிரியர் சிவக்குமார் அவர்கள் 16 தனிநபர் சாதனையாளர்களை உருவாக்கியுள்ளார். இதுமட்டும் இன்றி 100 மாணவர்கள்களை குழு உலக சாதனையாளராக உருவாக்கியுள்ளார். சிறப்பு விருந்தினர்களாக சேலத்தில் இருந்து சங்கரன் கராத்தே மாஸ்டர் , ஊட்டியில் இருந்து நரேஷ் குமார் கராத்தே ஆசிரியர் ஆகியோர் கலந்து விழாவினை சிறப்பித்தனர்.

Spread the love