December 15, 2025

தலை மறைவாக இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் : கடல் மார்க்கமாக இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பு! NIA தேடுதல் வேட்டை …

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். கடந்த ஏப்ரல் -22 அன்று பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் அங்கு இறங்கி வந்தனர். அவர்கள், அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய எதிர்ப்புப் படை (TRF) பொறுப்பேற்றது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை:இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் திட்டதை உருவாக்கி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிரமிப்பு பகுதிகளில் உள்ள 9 பயங்கர வாத முகாம்களை அழித்தது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானும் பதிலடி கொடுத்தது. இந்த சூழலில் இருநாடுகளுக்கும் இடையே போர் சூழல் உருவானது.இதனையடுத்து சர்வதேச நாடுகளின் அறிவுறுத்தலின் படி, இந்தியா – பாகிஸ்தான் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இளம் பெண் ஜோதி மல்கோத்ரா என்பவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அவரிடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த நபர்கள்:இந்த பரபரப்பான சூழலில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு முக்கியமான தகவல்களை கசியவிட்டதாகக் கூறி குருதாஸ்பூரில் இரண்டு பேரை பஞ்சாப் காவல்துறை கைது செய்துள்ளது.இது குறித்து பஞ்சாப் காவல்துறை இயக்குநர் ஜெனரல் கௌரவ் யாதவ் கூறுகையில்,’’ சந்தேகத்திற்கிடமாக சுக்ப்ரீத் சிங் மற்றும் கரன்பீர் சிங் என்ற இருவரை விசாரித்தனர்அப்போது அவர்களிடன் மூன்று மொபைல் போன்கள் மற்றும் எட்டு லைவ் கார்ட்ரிட்ஜ்கள் (.30 போர்) பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் வாட்ஸ் ஆப் மூலம் இந்திய ஆயுதப்படைகள் தொடர்பான முக்கியமான தகவல்களை ஐஎஸ்ஐ அமைப்பு சேர்ந்தவர்களுக்கு அனுப்பட்டது தெரியவந்தது.முக்கியமான தகவல்களை கசிவு:தொடர்ந்து பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள உளவு பார்த்து ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ரகசிய விவரங்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் பகிர்ந்து கொண்டதாக பஞ்சாப் காவல்துறை இயக்குநர் ஜெனரல் கௌரவ் யாதவ் கூறினார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்புகளுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகவும் , தொடர்ந்து கடந்த 15-20 நாட்களாக அவர்கள் தகவல்களைப் பகிர்ந்து வந்துள்ளனர். அவர்களின் கணக்குகளுக்கு ரூ.1 லட்சம் மாற்றப்பட்டதாகவும் எல்லைப் பாதுகாப்பு டிஐஜி சதீந்தர் சிங் தெரிவித்தார்.இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படையினா் தேடி கொன்டு இருக்கும், தலை மறைவாக இருக்கும் ,பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மாா்க்கம் மாக இந்தியா விற்குள் நுழைவதற்கு நிறையா வாய்ப்பு இருக்கின்றது ,இதன் காரனமாக கடல் மீனவா்கள் மற்றும் கடல் ஓர கிராம மக்கள் மற்றும் துறை முகங்கள் யாரேனும் சந்தேகம் படும் விதமாக இருந்தால் அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் தொிவிக்கவும் அல்லது NIA தலைமையகம் புது தில்லி 8585931100 NIA மும்பை- 7588707129,NIA கொச்சி 9497715294,NIA ஹைதராபாத்-9493799357NIA சென்னை- 94999 45100 மேலே கண்ட தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்..

Spread the love