March 14, 2026

தனியார் சொந்த வாகனத்தை வாடகை உபகரணமாக மாற்றி – அரசு விதிமுறைகளை மீறும் மாவட்ட மேலாளர் !!

சிவகங்கை டாஸ்மார்க் மாவட்ட மேலாளராக பணியாற்றி வருபவர்கள் கடந்த இரண்டு காலகட்டங்களாக தனியார் வாகனத்தை தனி நபருக்கு சொந்த வாகனத்தை வாடகை உபகரணமாக மாற்றி பயன்படுத்திக் கொண்டு அந்த வாகனத்தில் துணை ஆட்சியர் என்ற பெயர் பதாகை பதித்து உலா வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு !

இதுகுறித்து மாவட்ட மேலாளரிடம் கேட்ட பொழுது அவ்வாறு ஏதேனும் தகவல் இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள் அது குறித்து தெரிந்து கொள்கிறேன் என்ற பதில் அளித்தார்.ஆனால் மோட்டார் வாகன சட்டத்தின் படி வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் கேட்ட பொழுது அவர் கூறியதாவது தனி நபர் தனது சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தும் வாகனத்தை ரத்த சொந்தங்கள் அல்லாது பிறருக்கு கமர்சியல் அதாவது வாடகை ஒப்பந்தம் பேரில் பயன்படுத்தக் கூடாது என்ற தகவலை தெரிவித்தார் அது மட்டுமல்லாது வாகனத்தில் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் ஓட்டுநர் பயன்படுத்திக் கொள்ளலாம் அதை தவிர்த்து சம்பந்தமில்லாத வாகனத்திற்கு அதற்கும் உரிமை அல்லாத நபர்கள் அந்த வாகனத்தில் பயணிக்க கூடாது என்பதே மோட்டார் வாகன சட்டத்தின் சாராம்சமாகும் இதை முறியடிக்கும் விதமாகவும் அரசாங்க முக்கிய பொறுப்பில் பணியாற்றும் நபர் தனது சொந்த தேவைக்காக வாகனங்களை பயன்படுத்துவது சட்டவிரோதமான செயலாகவே கருதப்படுகிறது இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை , மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாடகை வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களின் கோரிக்கையாக உள்ளது.

For Advertisement Contact:9585323132 -9443571719

Spread the love