March 14, 2026

அஜித் – திரிஷா : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீடு தள்ளி வைப்பு ! ரசிகர்கள் ஏமாற்றம் •••

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், திரிஷா நடித்துள்ள படம் விடாமுயற்சி. இந்த படத்தில் இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி மற்றும் கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியானது.இந்த படத்திற்கான டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. அடுத்ததாக மொத்த படப்பிடிப்பும் முடிந்ததாக கூறி அஜித்திற்கு மகிழ் திருமேனி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருந்தார். இதையடுத்து அஜித் தனது டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்தனர். இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்திருக்கும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘சவதீகா…(Sawadeeka)’ லிரிக் வீடியோ வெளியாகியிருந்தது.விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், *அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்*. சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப் போய்விட்டது. மேலும் இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 பொங்கல் விடாமுயற்சி பொங்கல் என்று ஆவலாக காத்திருந்த நேரத்தில், வெளியீடு தள்ளிப்போவதாக வெளியான அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் நடிகர் அஜித் நேற்று சிங்கப்பூர் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது..

Spread the love