மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் திரை உலகில் 22 ஆண்டுகளாக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் இவர் தற்போது அஜித்துடன் ‘விடாமுயற்சி, குட் பேட் அக்லி’ மற்றும் கமலின் ‘தக் லைப்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் ‘விஸ்வம்பரா’ படத்திலும், மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், ஆர்.ஜே.பாலாஜி நடிகர் சூர்யாவை வைத்து இயக்கி வரும் ‘சூர்யா 45’ படத்தில் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை உறுதி படத்தும் விதமாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடிப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோயம்புத்தூர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


More Stories
தலைவன் தலைவி விமர்சனம்: காதலும் மோதலுமான கணவன் – மனைவி! எப்படி ?
குபேரா விமர்சனம்: மாறுபட்ட வேடத்தில் ‘அபாரமான நடிப்பை’ வெளிப்படுத்திய தனுஷ்
தக் லைஃப்: நாயகன் கூட்டணி 38 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சாதித்ததா?