December 15, 2025

சமுத்திரக்கனி மற்றும் அனன்யா நடித்துள்ள ‘திரு மாணிக்கம்’ படம் வருகிற டிசம்பர் 20-ந் தேதி வெளியாக உள்ளது.

சமுத்திரக்கனி மற்றும் அனன்யா நடித்துள்ள ‘திரு மாணிக்கம்’ படம் வருகிற டிசம்பர் 20-ந் தேதி வெளியாக உள்ளது. இயக்குனர் நந்தா பெரியசாமி இவரது இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள திரைப்படம் ‘திரு.மாணிக்கம்’. நடிகை அனன்யா இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சீதா ராமம்’ படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஜி.பி.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும்ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர். ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா? அதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பதை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது.

Spread the love